இளம் தலைமுறையினரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக, தேசபற்று மக்கள் சக்தி, இம்முறை பாராளுமன்ற தேர்தலில், கண்டியில் புதியவர்களை களமிறக்கியுள்ளதாக, தேசபற்று மக்கள் சக்தியின் கண்டி தொகுதி அமைப்பளரும், வேட்பாளருமான தேசகீர்தி முருகேசு தீபன் தெரிவித்துள்ளார்.
கண்டியில் மாகியாவ கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த அவர்,
பலம் வாய்ந்த கட்சிகள் எமக்கு கண்டியில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கவில்லை. பணம் படைத்தவர்கள் மட்டுமே அக் கட்சியில் போட்டியிடுகின்றார்கள்.
எனவே, என் மக்களுக்கு சேவையை செய்வதற்காக நான் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
இளம் தலைமுறையினரை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்ற கோரிக்கை எம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, கண்டி தமிழ் சமூகம், பூ கொத்து சின்னத்துடன் கைகோர்த்து, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு தமிழரை இம்முறை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.