சூடானில் உள்ள கெசிரா மாநிலத்தின் தலைநகரான வாட் மதனியில் உள்ள பள்ளிவாசலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ள வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசு சாரா குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று அல்-இம்திடாத் பகுதியில் உள்ள ஷேக் அல் ஜுலி பள்ளிவாசலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாலை நேரத் தொழுகைக்குப் பிறகு வான்வழியாக பள்ளிவாசல் மீது குண்டு வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இதுவரை 31 பேர் பலியானதாகவும், அவர்களில் 15 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், மேலும் அடையாளம் தெரியாத பல உடல்கள் உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் இடையில் ஆயுத மோதல் இடம்பெற்று வருகின்றது. இம்மோதலினால் இற்றைவரையும் 24,580 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.