அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக குறைக்க வேண்டும். இல்லையெனில் நாடு விரைவில் வங்குரோத்து அடையும் அபாயத்துக்கு முகம் கொடுத்திருப்பதாக உலகின் முன்னணி பணக்காரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் குடியரசு கட்சி அபேட்சகரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவளித்துவரும் எலன் மஸ்க் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த மே மாதம் வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் கடன் பாரியளவில் அதிகரித்துள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்பின்புலத்திலேயே எலன் மஸ்க் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். ட்ரம்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 75 மில்லியன் டொலரை வழங்கியுள்ள இவர், பிரசாரங்களிலும் பங்குபற்றி வருவதோடு ட்ரம்புக்கு ஆதரவாக சமூக வலைதளத்திலும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.