102
யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் ஒரு வகையான போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இச்சந்தேக நபரிடமிருந்து 1,400 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். விசேட நிருபர்