Home » வடக்கு மாகாண ஆளுநருரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

வடக்கு மாகாண ஆளுநருரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

by sachintha
October 24, 2024 8:36 am 0 comment

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung)க்கும் இடையிலான சந்திப்பு நேற்று (23) வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அமெரிக்கத் தூதுவர், காணி விடுவிப்பு தொடர்பான விபரங்களையும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். தற்போது ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் காணி சம்பந்தப்பட்ட பிணக்குகள் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் பாரியளவில் காணப்படுவதாகவும் அவற்றை தீர்ப்பதற்கு தற்போதுள்ள அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து சாதகமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

மேலும், வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்ததுடன் ஆளுநரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT