யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையில் பயின்ற மாணவி அருள்பிரகாசம் கிரிஜா தயாரித்த குறுந்திரைப்படம் மெய்ம்மை (The Reality). இது இவரது முதலாவது குறுந் திரைப்படம் ஆகும்.
யாழ்ப்பாண பல்கலைகழக பொன்விழா கொண்டாட்டத்தின் ஒர் அங்கமாக ஊடகத்துறையினரால் யாழ் பல்கலைக்கழக ஏற்பாட்டில் குறுந்திரைப்பட விழா யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை நான்காம் வருட மாணவர்கள் 31 பேரால் தயாரிக்கப்பட்ட குறும்படங்களில் இருந்து 10 குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டன. அந்த பத்தில் ஒன்றுதான் இந்த மெய்ம்மை என்னும் குறுந்திரைப்படம்.
இத்திரைப்படம் அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படம், எந்தவொரு முதலீடுகளும் இன்றி கிடைக்கப்பெற்ற வளங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இக் குறும்படத்திற்கான கதை, திரைக்கதையை கிரிஜா எழுதி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்குறும்படத்தை தயாரித்து முடிப்பதற்கு உதவி செய்த மற்றும் இதில் நடித்திருந்த அனைத்து கலை உள்ளங்களுக்கும் இவர் நன்றி தெரிவித்துள்ளார். கணேஷ் கஜன் Lishee Lishee, RK Kaviz ஆகியோருக்கு விஷேட நன்றிகளை தெரிவித்துள்ளார். கிரிஜா மன்னார், விடத்தல்தீவில் அருள்பிரகாசம் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.