Monday, November 4, 2024
Home » தனுஷ், ஐஸ் மீண்டும் இணையும் அறிகுறி

தனுஷ், ஐஸ் மீண்டும் இணையும் அறிகுறி

by damith
October 21, 2024 8:46 am 0 comment

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு விசாரணை கடந்த 19ஆம் திகதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். அவர்களது இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இருவரும் இரண்டு ஆண்டுகள் கழித்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது.

அப்போது அக்டோபர் 7 ஆம் திகதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த நாளில் தனுஷும், ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி. இதனையடுத்து கடந்த அக்டோபர் ஏழாம் திகதி விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த சமயத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே ஆஜராகவில்லை. இதனால் வழக்கை மீண்டும் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த விவாகரத்து மனு தொடர்பான விசாரணை அக்டோபர் 19 ஆம் திகதி மீண்டும் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுபாதேவி முன்பாக வந்தது. அன்றும் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே நேரில் ஆஜர் ஆகவில்லை. இதனால் இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் வரும் நவம்பர் 2 ஆம் திகதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருந்தாலும், அவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்தும் தனது மகள் மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழ வேண்டும் என விரும்புகிறாராம். இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து விவாகரத்து வழக்கில் ஆஜர் ஆகாமல் இருப்பதால், இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x