67
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் (Eric Walsh) நேற்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்து, அம்மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரனுடன் கலந்துரையாடினார்.
முல்லைத்தீவு மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக அவர்கள் இருவரும் கலந்துரையாடினர். இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பல்வேறு அபிவிருத்தி வேலைகள் தொடர்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கனடா உயர்ஸ்தானிகருக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விபரித்தார்.
மாங்குளம் குறூப் நிருபர்