Monday, November 4, 2024
Home » சியெட் விற்பனையாளர்கள் தமது வெற்றியினை பாங்கொக் மற்றும் பட்டாயாவில் கொண்டாடினர்

சியெட் விற்பனையாளர்கள் தமது வெற்றியினை பாங்கொக் மற்றும் பட்டாயாவில் கொண்டாடினர்

by mahesh
October 16, 2024 10:00 am 0 comment

இலங்கையின் முன்னணி டயர் உற்பத்தியாளரான சியெட் களனி ஹோல்டிங்சினால் (CEAT Kelani Holdings) ட்ரக் மற்றும் பஸ் டயர்களின் விற்பனையில் இலக்கை தாண்டிய சிறந்த செயல்திறன் கொண்ட டயர் விற்பனையாளர்களுக்கு, தாய்லாந்தில் அண்மையில் ஒரு வேடிக்கை வினோதத்துடன் கூடிய விடுமுறையை வெகுமதியாக அளிக்கப்பட்டது.

மொத்தம் 31 விற்பனையாளர்கள் இந்த சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற்றிருந்தனர். சியெட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் விற்பனையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட பங்கேற்பாளர்கள், சியெட்டின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்களுடன் இணைந்து நான்கு நாட்கள் பட்டாயா மற்றும் பாங்கொக்கில் – பிப்ரவரி முதல் ஏப்ரல் 2024 வரையிலான விற்பனை சாதனைகளைக் கொண்டாடினர்.

குழுவின் பயணத்திட்டத்தின் சிறப்பம்சங்களில், பவளத் தீவு (கோஹ்லார்ன்) சுற்றுப்பயணம், வேகப் படகு சவாரிகள், பாங்கொக்கின் சின்னமான சாவ் ப்ரேயா ஆற்றின் குறுக்கே ‘சாவ் ப்ரேயா ப்ரின்ஸ்சஸ் ‘இல் சிறப்பு இரவு உணவினை உண்டு கழித்ததுடன் நகரின் ஒளிமயமான அடையாளங்களின் ஈர்க்கக்கூடிய காட்சிகளை கிராண்ட் பேலஸ் மற்றும் வாட்அருனில் பார்த்து ரசித்ததுடன் முதற்தர ஹோட்டல்களில் சிறப்பு இரவு உணவு விருந்து மற்றும் ஷொப்பிங்கும் சென்று மகிழ்ந்தனர்.

அவர்கள் பாங்கொக்கில் பாங்கொக்கின் மிக உயரமான மற்றும் மிகவும் பிரபலமான ஹோட்டல்களில் ஒன்றான Baiyoke Sky ளுமல ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x