ஜோன் கீல்ஸ் நிறுவனத்தினால் 1.2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்ட Cinnamon Life at City of Dreams Sri Lanka சொகுசு ஹோட்டல், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இலங்கையில் தனியார் துறையின் மிகப்பெரியதும் மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீடாகவும் குறிப்பிடப்படக்கூடிய இந்த ஹோட்டல் ஆனது, வர்த்தகம், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக தெற்காசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க சுற்றுலாத் தலமாக நாட்டின் சுற்றுலாத் துறைக்கு புதிய திருப்புமுனைனயாக அமையும்.
687 ஆடம்பர அறைகளைக் கொண்ட Cinnamon Life at City of Dreams Sri Lanka சொகுசு ஹோட்டலில், பால்ரூம்கள், high-tech நிகழ்வுகள் மற்றும் மாநாட்டு நிகழ்வுகள் போன்ற தனித்துவமான வசதிகளுடன், ஒரே நேரத்தில் வெவ்வேறு தளங்களில் 5,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்களை உள்ளடக்கவும் அவர்களுக்கான சேவைகளை பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பது சிறப்பம்சமாகும்.
சர்வதேச மாநாடுகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான நிகழ்வுகளை கொழும்பில் மிகப்பெரிய நிகழ்வு அரங்காக ஏற்பாடு செய்யும் வசதியை வழங்குவதால், உலகளாவிய MICE சுற்றுப்பயணங்களுக்கான முன்னணி இடமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.