Monday, November 4, 2024
Home » இலங்கை – இந்தியாவுக்கிடையில் தரைவழி ரயில் பாதைத் திட்டம்
ஐந்து பில்லியன் அமெ. டொலரில்

இலங்கை – இந்தியாவுக்கிடையில் தரைவழி ரயில் பாதைத் திட்டம்

இந்திய ஊடகத்துக்கு இலங்கை அதிகாரி பேட்டி

by mahesh
October 16, 2024 7:00 am 0 comment

இலங்கை, இந்தியாவுக்கிடையில் 05 பில்லியன் அமெரிக்க டொலர் வீதி மற்றும் ரயில் பாதை இணைப்பு திட்டம் குறித்து மீண்டும் ஆராயப்படுவதாக, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கான செலவை, இந்தியாவே பொறுப்பேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பொறுப்பேற்றுள்ளதையடுத்து, அறிவிக்கப்பட்டுள்ள முதலாவது பாரிய இரு தரப்பு திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கூட்டமொன்றில் கடந்த மாதம் நான், கலந்துகொண்டேன். நாங்கள் தமிழ் நாட்டின் இராமேஸ்வரத்துக்கும் திருகோணமலைக்குமிடையில் நெடுஞ்சாலையையும், ரயில் பாதயையும் அமைக்கவுள்ளதாக பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

இரு நாடுகளினதும் வர்த்தகர்கள் அதிகளவு கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாலேயே, இது குறித்து திட்டமிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரயில் மற்றும் தரை வழிப்பாதையை அமைத்தால் இரு தரப்பினருக்கும் உதவியாக அமையக்கூடும்.

ஐரோப்பா உட்பட ஏனைய நாடுகளுடன் வர்த்தகத்துக்கு அது உதவும். இந்திய வர்த்தகர்கள் இலங்கையிலிருந்து நன்மையை பெறமுடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x