Monday, November 4, 2024
Home » சீனாதான் உண்மையான ஹேக்கர்கள் நாங்கள் அல்ல; தாய்வான் பதிலடி

சீனாதான் உண்மையான ஹேக்கர்கள் நாங்கள் அல்ல; தாய்வான் பதிலடி

by Rizwan Segu Mohideen
October 15, 2024 2:31 pm 0 comment

சீனா தான் உண்மையான ஹேக்கர்கள், தாய்வான் அல்ல. தாய்வானிய ஹேக்கிங் குழுவினர் போலியான செய்திகள் பரப்புவதாக சீனா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அரசின் மூத்த அரசாங்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு, தாய்வான் இராணுவ ஆதரவு பெற்ற அநாமதேய 64 என்ற ஹேக்கிங் குழு சீனாவில் உள்ள இலக்குகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது. இந்த “பிரச்சார எதிர்ப்பு நாசவேலை” பற்றிப் முறையிடுமாறு அது மக்களை வலியுறுத்தியது.

குழுவில் அங்கம் வகித்த மூன்று தாய்வானியர்களின் பெயரையும் அது பெயரிட்டு அவர்களின் படங்களையும் வெளியிட்டது.

ஜனநாயக ரீதியாக ஆளப்படும் தாய்வான், சீனா தனது சொந்தப் பகுதி என்று உரிமை கோருகிறது. இது சீன ஹேக்கிங் மற்றும் தவறான தகவல்களால் பாதிக்கப்பட்டதாக அடிக்கடி புகார் கூறுகிறது.ஆனால் பீஜிங் திருப்பி தைபே மீது குற்றம் சாட்டுவது அரிது.

தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகம் முழுவதும் ஹேக்கராக இருப்பது சீனாதான் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தினசரி சைபர் தாக்குதல்கள், தாய்வான் மற்றும் இதேபோன்ற ஜனநாயக கொள்கைகளைக் கொண்ட நாடுகளுக்கு எதிராக செயற்படும் முதல் நாடு சீனா . ” என்றார்.

சீனாவின் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது, என கூ மேலும் கூறினார்.

“அவர்கள் விளம்பரப்படுத்தியதைப் பொறுத்தவரை, இராணுவத்திற்கு நாட்டைப் பாதுகாப்பதற்கான நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாக அவ்வாறு செய்வதிலிருந்து விலகிச் செல்லாது.”

மேலும் பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் சோ ஜங் தை, தாய்வான் மீது தாக்குதல் நடத்துவதற்காக சீனா பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக கூறினார். “எங்களுக்கு எதிரான போலி செய்தி குற்றச்சாட்டுகளுக்கு நாம் வலுக்கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்,” சோ கூறினார்.

தாய்வானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பலத்தை பயன்படுத்துவதை சீனா ஒருபோதும் கைவிடவில்லை.தாய்வான் அரசாங்கம் பீஜிங்கின் இறையாண்மை கோரிக்கைகளை நிராகரிக்கிறது.நாட்டு மக்கள் மட்டுமே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்று கூறினர்.

தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தேவை சீனா வெறுக்கிறது. அவரை “பிரிவினைவாதி” என்று அழைக்கிறது. இது லாயின் பலமுறை பேச்சு வார்த்தைகளை நிராகரித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x