– 250 சமையல் கலை நிபுணர்களுடன் 1,500 இற்கும் மேற்பட்ட சேவையாளர்களுடன் செயற்படும்
ஜோன் கீல்ஸ் நிறுவனத்தினால் 1.2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்ட Cinnamon Life at City of Dreams Sri Lanka சொகுசு ஹோட்டல், இன்று (15) திறக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தனியார் துறையின் மிகப்பெரியதும் மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீடாகவும் குறிப்பிடப்படக்கூடிய இந்த ஹோட்டல் ஆனது, வர்த்தகம், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக தெற்காசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க சுற்றுலாத் தலமாக நாட்டின் சுற்றுலாத் துறைக்கு புதிய திருப்புமுனைனயாக அமையவுள்ளது.
687 ஆடம்பர அறைகளைக் கொண்ட Cinnamon Life at City of Dreams Sri Lanka சொகுசு ஹோட்டலில், பால்ரூம்கள், high-tech நிகழ்வுகள் மற்றும் மாநாட்டு நிகழ்வுகள் போன்ற தனித்துவமான வசதிகளுடன், ஒரே நேரத்தில் வெவ்வேறு தளங்களில் 5,000 இற்கும் மேற்பட்ட விருந்தினர்களை உள்ளடக்கவும் அவர்களுக்கான சேவைகளை பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பது சிறப்பம்சமாகும். சர்வதேச மாநாடுகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான நிகழ்வுகளை கொழும்பில் மிகப்பெரிய நிகழ்வு அரங்காக ஏற்பாடு செய்யும் வசதியை வழங்குவதால், உலகளாவிய MICE சுற்றுப்பயணங்களுக்கான முன்னணி இடமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்கள் அனைவருக்கும் சுவையான உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்காக 250 சமையல் கலை நிபுணர்களுடன் 1,500 இற்கும் மேற்பட்ட சேவை நிபுணர்களைக் கொண்ட குழு அர்ப்பணிப்புடன் செயற்படும். இங்கே, சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவொரு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளின் சுவையான அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளதுடன், குறிப்பாக chic French bistroவிலிருந்து American grill வரை.. அதுமட்டுமின்றி, ஆடம்பர முறையில் உருவாக்கப்பட்ட ஷாம்பெயின் மற்றும் கொக்டெய்ல் பார் ஆகியவற்றுடன் தங்களுக்குப் பிடித்த வைன் (Wines) வகைகளையும் தேர்ந்தெடுக்கும் பார் வசதிகள் மூலம் மறக்க முடியாத அனுபவத்தை பெற்றுக்கொள்ளவும் முடியும். இதற்கு மேலதிகமாக, Cinnamon Life தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல ரக ஆகார அனுபவங்களை வழங்குவதற்கு எதிர்வரும் மாதங்களில் பல புதிய உணவகங்களின் வருகையுடன் அனைவருக்குமான அனுபவத்தை மேம்படுத்தும் என்பது உறுதி. மேலும், ஹோட்டல் வளாகத்தில் அமைந்துள்ள பார்ப்பவர்களை வசீகருக்கும் அழகுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இடங்களில் திருமண நிகழ்வுகள் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுககளை ஒழுங்கமைக்க வாய்பினை தருவதால் இது கொழும்பில் அனைவருக்குமான சிறந்த புகலிடமாக இருக்கும்.
15ஆம் திகதி திறக்கவிருக்கும் Cinnamon Life at City of Dreams Sri Lankaவின் ஒரு மாபெரும் நிர்மாணத்திற்கான இறுதிக் கட்ட பணியாக , ஷொப்பிங் மற்றும் கேமிங் வசதிகளைக் கொண்ட பொழுதுபோக்கு வளாகம் மட்டுமன்றி 113 அறைகளைக் கொண்ட அதி சொகுசு ‘Nuwa’ ஹோட்டல் வசதியை 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் திறக்கவும் ஜோன் கீல்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திரா, “ஜோன் கீல்ஸைப் போன்று இலங்கையிலும் இத்திட்டம் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.” என தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “’City of Dreams Sri Lanka’ ஒரு தசாப்தத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான திட்டமாக சுட்டிக்காட்ட முடியும். ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகள் போன்ற வசதிகள் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் போன்ற வசதிகள் மூலம் இந்த வசதி கொழும்பில் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்கான மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் என்பது எனது நம்பிக்கை. தெற்காசியாவில் மேம்படுத்தும் திட்டமாக, இலங்கையில் சுற்றுலாத் தேவை, அந்நிய செலாவணி வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு இது பெரும் ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறோம். இத்திட்டம் முழுமையாக நிறைவடைந்தவுடன், 20,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் மூலம் இலங்கை சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்படும். இலங்கையை பிராந்திய மற்றும் உலகளாவிய சுற்றுலா சந்தையில் முன்னணிக்கு கொண்டுவருவதற்கான குழுவின் பரந்த மூலோபாயத்தின் படிகளில் ஒன்றாகவும் இதைக் குறிப்பிடலாம். இவ்வகையான பெரிய அளவிலான திட்டங்களுக்கு தலைமை தாங்குவது, நிலையான வளர்ச்சியை அடைவதற்கான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பெரும் அர்ப்பணிப்பை தெளிவாக வலியுறுத்துகிறது.” என தெரிவித்தார்.
Cinnamon Life at City of Dreams Sri Lanka, கொழும்பின் நகர மத்தியில் ஒரு தனித்துவமான இடத்தில் அமைந்துள்ளது, இது நாட்டின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களின் திறன்களை 1000 க்கும் மேற்பட்ட பழமையான கலைப் படைப்புகளைக் கொண்ட கலைக்கூடத்துடன் காட்சிப்படுத்துகிறது. கலையில் இலங்கைக்குரிய பன்முகத்தன்மையையும் சிறப்பையும் வெளிப்படுத்தும் இந்த கலைப்படைப்புகளின் தொகுப்பு, கலைப் பாரம்பரியத்தைப் போற்றும் மற்றும் பாதுகாக்கும் முயற்சி என்றும் கூறலாம்.
அதன்படி, Cinnamon Life at City of Dreams சுற்றுலாப் பயணிகளுக்கு கொழும்பு நகரில் ஒரு சிறந்த அனுபவத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது, மேலும் தங்கும் வசதிகளுக்கு அப்பால் பொழுதுபோக்கு, கலை, ஃபேஷன் மற்றும் உணவு வகைகளை அனுபவிப்பதற்கான சரியான வாய்ப்பை வழங்குகிறது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் அனைத்து பார்வையாளர்களும் Cinnamon Life at City of Dreamsக்கு வந்து இந்த சேவைகளை அனுபவிப்பதுடன் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நினைவுகளையும் தங்களுடைய வாழ்க்கையில் சேர்க்க முடியும்.