194
டிஸ்கோ ராஜா பவுண்டேஷன் சிங்களத் திரைப்படமொன்றை தயாரிக்கவுள்ளது. அதில் இலங்கையிலுள்ள தமிழ் சினிமா, நாடக கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக இந்தத் திரைப்படத்தை தயாரிக்கவுள்ள டிஸ்கோ ராஜா பவுண்டேஷனின் ஸ்தாபகரும் தலைவருமான டிஸ்கோ ராஜா தெரிவித்தார். அதற்கான பூஜை கடந்த சனிக்கிழமை கொழும்பு, பொரளையிலுள்ள ருகுணுகலா மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ், சிங்கள கலைஞர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.