வடக்கு காசா பகுதியில் ஜபாலியா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் ஐக்கிய நாடுகளின் அமைதி படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல்களுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால அமைதிப் படையினராக பணியாற்றும் இலங்கையர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லெபனானின் (UNFIL) நகோரா தலைமையகத்தில் உள்ள ஐ.நா இடைக்காலப் படை மற்றும் அருகிலுள்ள தளங்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.