உலக குடியிருப்பு தினம் நேற்று (07) திங்கட்கிழமை செத்சிரிபாயவில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக புதிதாக நியமிக்கப்பட்ட கிராமிய நகர மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.பி.எம் அத்தப்பத்து மற்றும் ஐக்கிய நாடுகள் மனித நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை வதிவிடப் முகாமையாளர் திருமதி ஹர்சனி ஹலங்கொட அமைச்சின் கீழ் உள்ள அதிகார சபைகளின் பொது முகாமையாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். இதன்போது, அகில இலங்கை ரீதியாக உலக குடியிருப்பு தினம் பற்றி பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்திய சித்திரம் வரைதல், கட்டுரை, வீதி நாடகம் என்பவற்றில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பணப்பரிசில்களும் விருது சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
(அஷ்ரப் ஏ சமத்)