மதுரங்குளி கடையாமோட்டை பிரதான வீதியின் கடையாமோட்டை தொடக்கம் மல்லம்பிட்டி பெரிய பாலம் வரையான இரு ஓரங்களிலும் வீசப்பட்ட குப்பை கூளங்களால் சுற்றுச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு காணப்பட்டதுடன் இவ்வீதியில் பயணிப்பவர்களும் பல சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர்.
இவற்றை கருத்தில் கொண்டு மதுரங்குளி பொலிஸார் மற்றும் கடையாமோட்டை முஸ்லிம் தேசிய பாடசால மாணவர்கள் இணைந்து சிரமதானப் பணி ஒன்றை முன்னெடுத்து மல்லம்பிட்டி பெரிய பாலத்தின் இரு ஓரங்களையும் சுத்தப்படுத்தினர்.
மேற்படி சிரமதானப் பணியில் மதுரங்குளி பொலிசார், அரச அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் மக்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம் றியாஸ், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவு சங்கத் தலைவருமான ஏ.எச்.எம். ஹாரூன், புத்தளம் பிரதேச சபை ஊழியர்கள், கடையாமோட்டை கிராம சேவையாளர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(புத்தளம் தினகரன் நிருபர்)