கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா குறைந்தது 17.9 பில்லியன் டொலர் ஆயுத உதவிகளை வழங்கி இருப்பதாக பிரவுன் பல்கலைக்கழகத்தின் போர் செலவுகள் திட்டம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செலவுகளில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம் அமைப்பை மீள் நிரப்பல் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், அதேபோன்று துப்பாக்கிகள் மற்றும் போர் விமான எரிபொருளுக்கான ரொக்கப்பணத்திற்கான 4 பில்லியன் டொலர் செலவும் அடங்குகிறது என்று காசா போரின் ஓர் ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு கூடுதலாக 4.86 பில்லியன் டொலர் நிதி அளிக்கப்பட்டது என்றும் அறிக்கை கூறுகிறது.