Wednesday, November 6, 2024
Home » முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை; பதில் பொலிஸ் மாஅதிபர்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை; பதில் பொலிஸ் மாஅதிபர்

- தற்போதும் 163 உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில்

by Prashahini
October 7, 2024 2:41 pm 0 comment

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பதில் பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு கடமையில் தற்போதும் 163 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவர்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 உத்தியோகத்தர்களும், பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவின் 6 உத்தியோகத்தர்களும், இடமாற்றம் வழங்கப்பட்ட சில உத்தியோகத்தர்களும் அடங்குவதாக பதில் பொலிஸ் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x