NDB வங்கியின் அனுசரணையில் நடைபெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டிவிஷன் – C மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் LOLC ஹோல்டிங்ஸ் அணியை 190 ஓட்டங்களால் வெற்றி கொண்ட நவலோக்க மருத்துவமனை அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இத்தொடரின் இறுதிப் போட்டி, ப்ளூம்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் (29) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நவலோக்க மருத்துவமனை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களைக் குவித்தது. 266 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பாடிய LOLC ஹோல்டிங்ஸ் அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 17.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.
இதன்படி, 190 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிய நவலோக்க மருத்துவமனை அணி, இத்தொடரின் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.