Monday, November 4, 2024
Home » அணுஆயுதப் போர் உருவெடுக்குமா?

அணுஆயுதப் போர் உருவெடுக்குமா?

by gayan
October 5, 2024 6:00 am 0 comment

காஸா, ஈரான்,- லெபனான், சிரியா, யெமன் மற்றும் – இஸ்ரேல் போர் உச்சம் அடைந்துள்ளது. இது உலகப்போராக மாறும் அபாயம் உள்ளது. முக்கியமாக இந்தப் போர் அணு ஆயுதப் போராக மாறும் அபாயமும் உள்ளது.

ஏற்கனவே உக்ரைன் – ரஷ்ய போர் ஒரு பக்கம் தீவிரமாக நிற்காமல் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேல்– பலஸ்தீன போர் தொடருகின்றது. இரண்டு போருமே கண்டிப்பாக நீண்ட கால போராக இருக்கும். நீண்ட காலப் போரின் பின்விளைவுகள் இந்தப் போரின் மூலம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா – ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்குப் பின்பாக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா – ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் உக்ரைன்.

உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது. சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் -உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது, உக்ரைன் தனியாகப் பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவைச் சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்து விட்டன.

இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் பொறியாக இது அமைந்துவிடும். இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. உக்ரைன் அமெரிக்காவின் முழு நேர நட்புநாடு ஆவதற்கு முன்னர் அதை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ரஷ்யா இருக்கிறது. ஏனென்றால் ரஷ்யாவின் பெரும்பாலான எல்லையை உக்ரைன்தான் மூடி நிற்கிறது. இதற்காக முதலில் உக்ரைனை கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் இராச்சியம் நடத்தியது. ஆனால் அதன்பின் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர்களை உக்ரைன் மக்கள் தூக்கி வீசினார்கள்.

இந்த நிலையில்தான் உக்ரைனில் தற்போது கடந்த ஒன்றரை வருடமாக ரஷ்யா போர் செய்து வருகிறது. போர் காரணமாக உக்ரைன் நேட்டோவில் இணைய முடியாது. அதேசமயம் இந்தப் போர் முடியாமல் அப்படியே நீடிக்கும். இதில் நேட்டோ நேரடியாக தலையிட்டால் அது உலகப்போராக வெடிக்கும். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா இருப்பதால் போர்ச் சூழல் மோசமாகும் என்ற அச்சம் உள்ளது.

இது தவிர இப்போது பலஸ்தீனம்-இஸ்ரேல்- -ஈரான் மோதல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் – பலஸ்தீன போருக்கு முக்கியமான காரணம் நிலத்தகராறு. அதாவது பலஸ்தீனம் இருந்த இடத்தில்தான் தற்போதைய இஸ்ரேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1947 இல் இருந்து பலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வந்தது. தற்போது மீதம் இருக்கும் காஸா பகுதியையும், ஜெருசலேமின் வெஸ்ட் பேங்ங் பகுதிகளையும் கைப்பற்றும் முடிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் அதிகாரத்தை எதிர்க்கும் தனிப்பகுதிதான் காசா. இதில் இருந்து இஸ்ரேல் முன்பே வெளியேறிவிட்டது. காரணம் இங்கே உள்ள ஹமாஸ் அமைப்பு. இந்த ஹமாஸ் அமைப்பும் – இஸ்ரேலும்தான் தற்போது பலஸ்தீனத்திற்காக சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றன. இப்போது இந்த விவகாரத்தில் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தாக்குதல், ஈரான் மேற்கொண்ட தாக்குதல் என்று இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த இரண்டு நாடுகளைச் சேர்த்து தற்போது மொத்தம் 8 நாடுகள் போரில் நேரடியாகத் தலையிட்டுள்ளன. இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டுள்ளன. இரண்டு நாடுகளுமே பலஸ்தீனம் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இது மூன்றாம் உலகப்போராக வெடிக்கலாம் என்ற அச்சம் உள்ளது.

ஏனென்றால் இரண்டு போர்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இரண்டு போர்களிலும் அமெரிக்கா தலையிட்டுள்ளது. ஒன்று ரஷ்ய போர், இன்னொன்று இஸ்ரேல் போர். இரண்டுமே கொள்கை, நிலரீதியாக கடுமையான போர். பல நாடுகள் இதில் தலையிட்டுள்ளன. இந்தக் காரணங்களுக்காக மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம். அணு ஆயுதப் போராக இது உருவெடுக்கும் அச்சமும் உள்ளது.

உக்ரைனை மண்டியிட வைக்க ஏற்கனவே ரஷ்யா அணு ஆயுதத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.

மறுபுறத்தில் ஹமாஸை மொத்தமாக தலைமுறை தலைமுறையாக அழிப்போம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதனால் அவர்களும் கூட அணு ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் உள்ளது. இதனால் இந்த போர் அணு ஆயுத போராக மாறினாலும் ஆச்சரிப்படுத்துவதற்கு இல்லை என்கிறார்கள் இராணுவ ஆய்வாளர்கள்.

இதேசமயம் இஸ்ரேல் – ஈரான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால், மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நிலவும் நிலையில், இஸ்ரேல்- – ஈரான் இடையேயான இராணுவ பலம் எத்தகையது, இரு நாடுகளிடமும் எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன.

90.43 இலட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் இராணுவ வீரர்கள் எண்ணிக்கை மட்டும் 1.70 இலட்சம் ஆகும். அந்த நாடு இராணுவத்திற்கு பெரும் நிதி ஒதுக்குகிறது. இஸ்ரேலிடம் உள்ள போர் விமானங்கள் எண்ணிக்கை 241 ஆகும். பீரங்கிகள் 1,996 உள்ளன. ெராக்கெட் லோஞ்சர்கள் 150, போர்க்கப்பல்கள் 67, நீர்மூழ்கிக் கப்பல்கள் 5- உள்ளன. ரோந்துக் கப்பல்கள் 45 உள்ளன.

ஈரானை எடுத்துக்கொண்டால் அந்த நாட்டின் மக்கள் தொகை 8.75 கோடியாகும். இராணுவ வீரர்கள் எண்ணிக்கை 6.10 இலட்சம். இராணுவத்திற்கு பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது. 186 போர் விமானங்கள் உள்ளன. பீரங்கிகள் 1,370, ரொக்கெட் லோஞ்சர்கள் 775-, போர்க்கப்பல்கள் 101, நீர்மூழ்கிக் கப்பல்கள் 19- உள்ளன. ரோந்துக் கப்பல்கள் 21 உள்ளன.

எண்ணிக்கைகள் அடிப்படையில் இஸ்ரேலை விட ஈரான் அதிக ஆயுதங்கள், இராணுவ வீரர்களை கொண்டிருந்தாலும் இஸ்ரேலிடம் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. அது மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு இஸ்ரேலுக்கு உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x