133
பிரிட்டனை தலைமையகமாகக் கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில் புதிய உலக சாதனையாளராக, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 04 வயது நஸ்மி அக்யுளான் பிலால் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.
பத்தின் 100 ஆம் அடுக்கு வரை அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில் 02 நிமிடம் 12 வினாடிகளில் கூறி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அவரது பெற்றோர் கந்தளாய் வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர் (Physiotherapist) நஸார் முஹமட் நஸ்மி மற்றும் கிண்ணியா வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர் (Physiotherapist) அஸ்ரப் பாத்திமா பஸீஹா என்பது குறிப்பிடத்தக்கது.