Home » அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திப்பு

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திப்பு

- முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கான பொருளாதார வெளிப்படைத்தன்மையை தொடர்பில் வலியுறுத்தல்

by Rizwan Segu Mohideen
October 2, 2024 12:32 pm 0 comment

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (02) காலை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்பை முன்னெடுத்திருந்தார்.

இக்கலந்துரையாடலின் போது, ​​இலங்கையுடனான உறவுகளை ஆழப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய உயர் ஸ்தானிகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கடல்சார் பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது ஆதரவை உறுதிப்படுத்துவதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.

உயர் ஸ்தானிகர் ஸ்டீபன்ஸ், இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஆதரவளிப்பதில் அவுஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியதுடன், இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDIs) ஊக்குவிப்பதிலான தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய அங்கமாக பொருளாதார வெளிப்படைத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 நாடுகளின் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்களுடன் இன்று ஜனாதிபதி சந்திப்பு

தமிழரசுக் கட்சி தலைவர் எஸ். சிறீதரன் ஜனாதிபதியை சந்திப்பு

ஜனாதிபதி அநுரவை சந்தித்த ரஷ்ய தூதுவர்

ஜனாதிபதி அநுர – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையில் சந்திப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT