Home » நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு

நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு

- பெற்றோல் 95 விலைகளில் மாற்றமில்லை

by Prashahini
September 30, 2024 10:42 pm 0 comment

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் 92, மண்ணெண்ணெய், சுப்பர் டீசல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை பெற்றோல் 95 விலைகளில் மாற்றமில்லை.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

பெற்றோல் 92: ரூ. 21 இனால் குறைப்பு – ரூ. 332 இலிருந்து ரூ. 311
ஒட்டோ டீசல்: ரூ.24 இனால் குறைப்பு – ரூ. 307 இலிருந்து ரூ. 283
சுப்பர் டீசல்: ரூ. 33 இனால் குறைப்பு – ரூ. 352 இலிருந்து ரூ. 319
மண்ணெண்ணெய்: ரூ. 19 இனால் குறைப்பு – ரூ. 202 இலிருந்து – ரூ. 183

பெற்றோல் 95: விலையில் மாற்றமில்லை – ரூ. 377

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT