Home » ரூ. 3 1/2 கோடிக்கும் அதிக கஞ்சா மீட்பு

ரூ. 3 1/2 கோடிக்கும் அதிக கஞ்சா மீட்பு

- இராணுவ புலனாய்வு தகவலுக்கமைய யாழ், மணல்காட்டில் கைப்பற்றல்

by Rizwan Segu Mohideen
September 30, 2024 5:31 pm 0 comment

இராணுவம் புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலின் அடிப்படையில், மூன்றரை கோடிக்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று (30) யாழ்ப்பாணம் மணல்காட்டில் 36 மில்லியன் ரூபா பெறுமதியான 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இவை இந்தியாவிலிருந்து இலங்கை கடத்தல்காரர்களுக்காக மிகவும் நுட்பமான முறையில் கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் என சந்தேகிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போது சந்தேகநபர்கள் போதைப்பொருளை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT