Home » பதில் பொலிஸ் மாஅதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

பதில் பொலிஸ் மாஅதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

- 158 வருட பொலிஸ் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவமும் பதிவு

by Rizwan Segu Mohideen
September 27, 2024 5:37 pm 0 comment

பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (27) முதல் அமுலாகும் வகையில் இந்நியமனம் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

158 வருட பொலிஸ் வரலாற்றில் கான்ஸ்டபிள் ஆக சேவையில் இணைந்துகொண்டவர்கள் வரிசையில் பொலிஸ் மாஅதிபராக நியமனம் பெற்றுகொண்டிருக்கும் ஒரே அதிகாரி பிரியந்த வீரசூரிய ஆவார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நீதித்துறையில் பட்டம் பெற்ற அவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணியாக சத்தியபிரமானம் செய்துகொண்டதன் பின்னர் பொலிஸ் அதிகாரியாக நிலை உயர்வு பெற்றார்.

மனித வள முகாமைத்துவம் தொடர்பிலான வர்த்தக நிருவாக பட்டத்தையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்திற்குள் 36 வருட களங்கமற்ற சேவையை ஆற்றியுள்ள வீரசூரியவின் சேவையை பாராட்டி 10 பொலிஸ் மா அதிபர்கள் கடிதம் வழங்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.

பொலிஸ் குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபராகவும், பொலிஸ் விநியோக பிரிவின் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ள அவர், கிழக்கு தீமோர் மற்றும் ஹைட்டி ராஜ்ஜியத்தில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுக்கொள்ளும் வேளையில், வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக சேவையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT