Saturday, December 14, 2024
Home » ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு உலக வங்கி ஒத்துழைப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு உலக வங்கி ஒத்துழைப்பு!

- அனுப்பி வைத்த வாழ்த்துக் கடிதத்தில் தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
September 26, 2024 7:48 pm 0 comment

இந்நாட்டில் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

தற்போது இலங்கையின் பொருளாதாரம் மீளக் கட்டமைப்பதற்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் அவசியம் என்பதை அறிந்துகொண்டுள்ளதோடு, பொருளாதார வளர்ச்சி,செழுமை, மற்றும் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஒரே அளவான முக்கியத்துவத்தை கொண்டவை என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருப்போரின் தேவைகளை பூர்த்தி செய்வதை போலவே அனைத்தும் உள்ளடங்களான அபிவிருத்திக்கு இலங்கையின் புதிய நிருவாகத் தலைமைக்கு உலக வங்கிக் குழுமத்தின் ஆதரவை பெற்றுத்தர அர்ப்பணிப்பதாகவும் அந்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(முழுமையான கடிதம் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT