112
அதிக சம்பளம், ஊக்கக் கொடுப்பனவு மற்றும் வருகைக் கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரி ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளில் 27 தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த வாரத்தில் ஊழியர் எதிர்ப்புக் காரணமாக மூடப்பட்ட 200 வரையான ஆடைத் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் ஆடைத் தொழிற்சாலைகளில் 16 காலவரையின் மூடப்பட்டிருப்பதாகவும், பங்களாதேஷ் தொழில் சட்டத்தின் கீழ் சம்பளம் இன்றிய காலத்திற்கு மூடப்பட்டிருப்பதால் அதன் ஊழியர்கள் கோபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.