Sunday, October 13, 2024
Home » பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு

பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு

by Gayan Abeykoon
September 21, 2024 1:01 am 0 comment

யாழ்ப்பாணத்தில், பிறந்து 12 நாட்களேயான ஆண் சிசு ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளது. கோப்பாய் – வடக்கு பகுதியைச் சேர்ந்த ராகுல் ரேணுகா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், உயிரிழந்த குழந்தை கடந்த 31 ஆம் திகதி பிறந்துள்ளது. குழந்தையின் நிறை குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் விடுதியில் குறித்த சிசுவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளது.

இதன்போது, கடந்த 12ஆம் திகதி பால் புரையேறி குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x