Home » வடக்கில் பத்து வைத்தியசாலைகளுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து நன்கொடைகள்

வடக்கில் பத்து வைத்தியசாலைகளுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து நன்கொடைகள்

வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிப்பு

by Gayan Abeykoon
September 21, 2024 1:05 am 0 comment

வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள் ஜேர்மன் நன்கொடையாளர் ஒருவரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு, வவுனியா பொது வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (19) மாலை நடைபெற்றபோது, நன்கொடை பொருட்கள் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் கையளிக்கப்பட்டன.

ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து அமைப்பினூடாக சர்வதேச இந்து கலாசார ஆலோசகரான கலாநிதி இரத்னசாமி இராமேஸ்வரன் என்பவரால் ஜேர்மன் நாட்டிலிருந்து பெறப்பட்ட இந்த நன்கொடைகள், இலங்கையின் பல பாகங்களிலும் பகிர்ந்தளிக்கப்படுகிறன.

அதன் ஒரு கட்டமாக வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின்  அவசர சிகிச்சை பிரிவுக்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x