குருநாகல் மாவட்டத்தில், ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்களிப்புக்காக சகல பெட்டிகளும் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி ஆர். எம்.ஆர்.ரத்நாயக தெரிவித்தார்.
14 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய குருநாகல் மாவட்டத்திலிருந்து, 1,417,226 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி ஆர்.எம்.ஆர்.ரத்நாயக தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இம் மாவட்டத்தில் 977 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணுவதற்காக 04 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் குருநாகல் தொழில்நுட்பக் கல்லூரி, சேர் ஜோன் கொத்தலாவெல கல்லூரி, குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி, மலிய தேவ பெண்கள் கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் இந்த வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமைக்காக சகல போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இக்பால் அலி