கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உயிரியல் பாட சிரேஷ்ட ஆசிரியை எஸ். எப். ஏ. பெளஸியா ஹக்கீமின் சேவைநலன் பாராட்டுவிழா கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் சேர் ராசீக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
சிரேஷ்ட ஆசிரியை எஸ்.எப்.ஏ. பெளஸியா 1993 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் இனைந்ததிலிருந்து கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயர்தர உயிரியல் பாட ஆசிரியையாக 30 ஆண்டுகள் இக்கல்லூரிக்கு சேவையாற்றியதுடன், 2024.08.21 ஆம் திகதியுடன் இலங்கை ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஒய்வு பெற்ற சிரேஷ்ட ஆசிரியை எஸ்.எப்.ஏ. பெளஸியா ஹக்கீம் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயிரியல் பாட ஆசிரியராக, கல்லூரியின் முகாமைத்துவ குழு உறுப்பினராக, பகுதித்தலைவி, ஒழுக்காற்று சபை குழு உறுப்பினராக, வகுப்பாசிரியராக, மாணவிகளுக்கு சிறந்த உளவள ஆலோசகராகவும் செயற்பட்டதுடன் முன்னாள் அதிபர் ஏ.எச்.எம். பஷீர் காலத்தில் இருந்து கல்லூரியின் வளர்ச்சி பயணத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர். ஒழுக்கம், கல்வி அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல அதிபர்களுடன் சேவையாற்றிய ஒர் சிறந்த ஆசிரியை வாழ்த்தி பாராட்டி கெளரவிப்பதில் பாடசாலை சமூகம் பெருமிதம் கொள்கின்றது.
நிகழ்வில் அதிபர், பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் ஒய்வு பெற்ற எஸ்.எப்.ஏ. பெளஸியா ஆசிரியை பற்றிய நினைவு பெயர் உரைகள் மற்றும் வரலாற்று நினைவலைகளை சபையினர் மத்தியில் பகிர்ந்து கொண்டனர்.
ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவினை சங்க செயலாளர் ஆசிரியர் முஸ்தபா ஹக்கீம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிரேஷ்ட ஆசிரியை எஸ்.எப்.ஏ. பெளஸியா 30 வருட கால ஆசிரியர் சேவையினை பாராட்டி பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டதுடன், ஆசிரியர் நலன்புரி சார்பான நினைவு பரிசினை அதிபா் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
தரம் 06 தொடக்கம் 13 வரையான பகுதித்தலைவர்கள் அதனுடன் தொடர்பான ஆசிரியர்கள் இணைந்து பரிசில்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான எஸ்.எஸ்.எம். மசூதுலெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர்களான என்.டி. நதீகா, எம்.எஸ். மனுனா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசார ஊழியர்கள், ஒய்வு பெற்ற ஆசிரியை கணவர் ஹக்கீம் ஆசிரியர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.