Home » இறுதிநேரம் வரை காத்திருக்காது வாக்களிக்குமாறு வேண்டுகோள்

இறுதிநேரம் வரை காத்திருக்காது வாக்களிக்குமாறு வேண்டுகோள்

by Gayan Abeykoon
September 21, 2024 2:00 am 0 comment

இன்று நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை தொகுதியில் 188,222 பேர், சம்மாந்துறை தொகுதியில் 99,727 பேர், கல்முனை தொகுதியில் 82,830 பேர், பொத்துவில் தொகுதியில் 184,653 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 04 ஆகும்.

தபால் மூல வாக்களிப்புக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27,645 ஆகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 26,778 எனவும், அவற்றில் 867 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட செயலாளருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் தினமான இன்று நடந்துகொள்ள வேண்டிய முறை  தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய தரப்புகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அம்பாறை ஹாடி உயர்தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறுகின்றது. தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, வாக்காளர்கள் அனைவரும் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறும், இறுதிநேரம் வரை காத்திருக்காது வாக்குரிமையை பயன்படுத்துமாறும் அவர் தெரிவித்தார்.

பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்கப்பட மாட்டாது.

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை நிருபர்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x