Thursday, October 10, 2024
Home » பாகிஸ்தானில் இருந்து 13.53 மில். மக்கள் வெளியேற்றம்

பாகிஸ்தானில் இருந்து 13.53 மில். மக்கள் வெளியேற்றம்

by sachintha
September 20, 2024 1:09 pm 0 comment

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இருந்து 13.53 மில்லியனுக்கும் அதிகமான தொழில்முறையாளர்கள் வெளியேறி இருப்பதாக பாகிஸ்தான் பொருளாதார ஆய்வு அறிக்கை ஒன்றில் இருந்து தெரியவந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் 50க்கும் அதிகமான வெளிநாடுகளில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

அதன்படி நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் அதிக மனித வளங்களைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் இருப்பதோடு கற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் வெளிநாடு செல்வது பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் அந்நாட்டில் பல்வேறு துறைகளின் அபிவிருத்தி செயற்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 92,000 பட்டதாரிகள் மற்றும் 3,500,000 பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் நாட்டை விட்டுச் சென்றிருப்பதோடு, 2,500 மருத்துவர்கள், 6,500 கணக்காளர்கள் மற்றும் 5,534 பொறியியலாளர்கள் இதில் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x