Thursday, October 10, 2024
Home » குவைத்திற்கான தூதுவராக எல்.பி. ரத்நாயக்க

குவைத்திற்கான தூதுவராக எல்.பி. ரத்நாயக்க

- பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரை

by Rizwan Segu Mohideen
September 20, 2024 12:48 pm 0 comment

குவைத் இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரின் நியமனத்துக்கு பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குவைத் இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக எல்.பி. ரத்நாயக்கவின் பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.

நேற்றுமுன்தினம் (18) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்களான விதுர விக்ரமநாயக்க, (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, உதய கம்மன்பில ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x