தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொள்கலன் பாரவூர்தியொன்று வீதியின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து, நேற்று (19) காலை பின்னதுவைக்கும் பத்தேகமவுக்குமிடையில் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தின் பின்னாலுள்ள இரண்டு டயர்கள் வெடித்துள்ள நிலையில், சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் இந்த கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கொழும்பு நோக்கிச் செல்லும் இரண்டு பாதைகளில் ஒரு பாதை தடைப்பட்டதுடன், மற்றொரு பாதையில் வாகனப் போக்குவரத்து நடைபெற்றதாகவும் விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.