ஏ-9 வீதியின் வவுனியாவில் மோட்டார் சைக்கிளொன்றும் துவிச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கருகில் நேற்று முன்தினம் (18) மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ-9 வீதியூடாக வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிளொன்று, அதே வீதியில் பயணித்துக்கொண்டிருந்த துவிச்சக்கர வண்டிடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வட்டக்கச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய வீரசிங்கம் ஜனிதரன் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சண்முகம் யோகராசா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஒமந்தை பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா விசேட நிருபர்