கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அவருடன் நேரடித் தொடர்பிலிருந்த 26 பேர் கேரளாவின் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞன் கர்நாடகா மாநிலம் பெங்களூரிலுள்ள கல்லூரியில் கல்வி பயின்று வந்தவர் எனவும் அவருடன் தொடர்பிலிருந்த எவருக்கேனும் இந்நோய் அறிகுறிகள் உள்ளதா? என்பதைக் கண்டறியுமாறும் சுகாதாரத்துறை பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.