கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தெளிவுறுத்தும் அம்பாறை மாவட்டத்திற்கான செயலமர்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புகாரி முஹமட் தலைமையில் நேற்றுமுன்தினம் நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பங்குபற்றுனர்களாக உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கிராமமட்ட அபிவிருத்தித் தலைவர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வளவாளராக எம்.புகாரி, திட்ட முகாமையாளர் ரேணுகா, கிழக்கு மையத்தின் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பான முறையில் விரிவுரை வழங்கினார். இதன் போது பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதிநிதிகள் அங்குள்ளோருக்கு வழங்கப்பட்டன.
எம்.எப்.நவாஸ் (திராய்க்கேணி தினகரன் நிருபர்)