172
அக்கரைப்பற்று மெதடிஸ்த தேவாலயமானது இன்று 2024.09.17 (செவ்வாய்க்கிழமை) 90 ஆவது ஆண்டை நிறைவு செய்கின்றது. அக்கரைப்பற்று மெதடிஸ்த தேவாலய நிறைவுவழிபாடு இன்று 17 ஆம் திகதி காலை திருத்தலத்தில் இடம்பெறுகிறது.
இவ்வழிபாட்டில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு_கிழக்கு திருமாவட்ட அவைத் தலைவர் அருட்பணி சாம். சுபேந்திரன் அவர்கள் சிறப்பு இறைசெய்தி வழங்குகின்றார். அக்கரைப்பற்று மெதடிஸ்த தேவாலயமானது இங்கிலாந்திலிருந்து வருகை தந்த உவெஸ்லியன் பெண் மிஷனரி செல்வி கிளக் அம்மையாரின் தியாக இறைபணியின் அடையாளமாகும். இத்தேவாலயமானது அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமன்றி கிழக்கு மாகாணமெங்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
குழந்தைவேலு சற்குணானந்தன் (அதிபர்)