பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள அரசாங்கப் பாடசாலைகளில் பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு எதிராக சிந்து மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வித் திணைக்களத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில் சிந்து பாடப்புத்தகங்கள் சபைத் தலைவர், கல்வி அமைச்சின் செயலாளர்இ ஆரம்ப மற்றும் இடைநிலை கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இம்மனு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகும் சட்டத்தரணிகள், சிந்துவில் உள்ள பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் கல்வித் திணைக்களத்தில் இருந்து பாடப்புத்தகங்களை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். கல்வியாண்டு ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும், மாணவர்களுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் கிடைக்கப்பெறாவில்லை என்றனர்.
இதேவேளை சிந்து உயர் நீதிமன்ற நீதிபதி சலாவுதீன் மாகாணத்தில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளின் நிலைமையை எடுத்துக்காட்டும் விரிவான அறிக்கையொன்றையும் ஏற்கனவே மன்றில் சமர்ப்பித்துள்ளார்.