177
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படுமென மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய, இவ்வாறு மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார்.