Thursday, October 10, 2024
Home » விசாரணைகளை ஆரம்பித்துள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள்

விசாரணைகளை ஆரம்பித்துள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

by damith
September 16, 2024 8:45 am 0 comment

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் பிரசாரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சிறுவர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது​தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், பெரியவர்களின் உதவி மற்றும் தலையீடு அல்லது வற்புறுத்தலினூடாக இவ்வாறு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுர்கள் பங்கேற்பதால் விபத்துக்கள் அல்லது உடல் மற்றும் மன உளைச்சல்களுக்கு உள்ளாக நேரிடுமென அதிகார சபை எச்சரித்துள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தமது அதிகார சபைக்குள்ளதெனவும் இதனால், அந்த பொறுப்புகளை தாமதமின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சாசனத்தில், இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்டு அங்கம் வகிப்பதாகவும், அந்த சாசனத்தில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படப்பட்டிருப்பதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை அனைவரின் பொறுப்பாகக் கருதி தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள் பங்கேற்பதைத் தடுக்குமாறு பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x