Monday, October 7, 2024
Home » வாக்களிக்க விடுமுறை வழங்குவது கட்டாயம்
நிறுவனங்களின் ஊழியர்களுக்கு

வாக்களிக்க விடுமுறை வழங்குவது கட்டாயம்

by damith
September 16, 2024 8:30 am 0 comment

அரச, தனியார் மற்றும் (semi government) அரை அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக கட்டாயம் விடுமுறை வழங்கவேண்டுமென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு நிறுவனத்தின் தலைவர் இந்த சட்டத்துக்கு இணங்காமல், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவில்லையெனில், அதுபற்றி பெப்ரல் அமைப்புக்கு அறிவிக்குமாறும் அதன் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செயற்படும் நிறுவன தலைவர், சட்டத்தின் முன் குற்றவாளியெனவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரண்டு இலட்சம் ரூபா அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறான சம்பவங்கள் பதிவானால் அது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படுமெனவும் பெப்ரல் அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x