121
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்கும் நாட்டை மாற்றுவதற்குமான திட்டம் தம்மிடமே உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற தொகுதி கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, இந்தச் செய்தி கிராமங்களுக்கும் செல்லவேண்டும். நாங்கள் நாட்டுக்காக உழைத்துள்ளோம். நாட்டுக்கு எதிராக அல்ல. நம் நாட்டுக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் இயற்ற முயற்சிக்க மாட்டோம் என தெரிவித்தார்.