Thursday, October 10, 2024
Home » போதனைகளிலிருந்து நாமும் பல விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்

போதனைகளிலிருந்து நாமும் பல விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்

- எதிர்க்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

by Prashahini
September 16, 2024 12:51 pm 0 comment

மனிதநேயம் நிறைந்த கௌரவமான அன்பையும் சகோதரத்துவத்தையும் உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டவரும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களின் வழிகாட்டியாகக் கருதப்படுபவருமான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் இன்றாகும். அதன் பொருட்டு வாழ்த்துச் செய்தியை அனுப்புவது தொடர்பில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

எந்தவொரு சமூகத்திலும் வாழும் மனித இனத்தின் சிந்தனை மற்றும் நடத்தையின் அடிப்படையாக அமைந்திருப்பது அவர்கள் நம்பி ஏற்றுக்கொண்ட ஆழமான மத நம்பிக்கையாகும். தீய பழக்கங்கள் நிறைந்திருந்த உலகை நல்லொழுக்கமுள்ளதாக மாற்றுவதற்காக அர்ப்பணித்த ஆன்மீகத் தலைவருமாகக் கருதப்படும் அவர் உலகெங்கும் பரப்பிய போதனைகளிலிருந்து நாமும் பல விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இனம், மதம், குலம் ஆகியவற்றைப் பாராது ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் செயல்படும் சமூகத்தை உருவாக்க அவரின் வழிகாட்டலைப் பின்பற்ற நமக்கும் வாய்ப்புள்ளது.

அவரின் போதனையைப் பின்பற்றிய அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் ஒரு நாடாக எழுச்சி பெறுவதற்கான நேரம் வந்துள்ளது. அதற்காக இந்த கடினமான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x