Home » மியன்மார் இனக்குழுக்களை அச்சுறுத்த வேண்டாம்

மியன்மார் இனக்குழுக்களை அச்சுறுத்த வேண்டாம்

- மியன்மார் உரிமைக் குழுக்கள் சீனாவிடம் வலியுறுத்தல்

by Rizwan Segu Mohideen
September 15, 2024 9:24 am 0 comment

சுமார் 300 மியன்மார் சிவில் சமூகக் குழுக்கள், நாட்டின் இனரீதியான ஆயுத அமைப்புகளுக்கு (EAOs) எதிரான அனைத்து அச்சுறுத்தல்களையும் உடனடியாக நிறுத்துமாறும், “சட்டவிரோத மியன்மார் இராணுவ ஆட்சிக்குழுவுடன்” போர்நிறுத்தம் மற்றும் சலுகைகளுக்குச் சம்மதிக்க அழுத்தம் கொடுப்பதை நிறுத்துமாறும் சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளன

இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் வன்முறை ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பி ஓடிய முன்னாள் பர்மா ஆர்வலர்களால் தயாரிக்கப்பட்ட வெளியீட்டின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் அறிக்கை, “மியன்மார் இராணுவ ஆட்சிக்குழு பாரிய அளவில் அட்டூழியங்களைச் செய்து வருகிறது. பிராந்திய பாதுகாப்பின்மை மற்றும் ஸ்திரமின்மைக்கு இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அரசு ஆட்சியை அகற்றி, அதன் சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும்போது மட்டுமே நிலையான அமைதி இருக்க முடியும்” என்று 270 அங்கீகரிக்கும் அமைப்புகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் அதன் திட்டமிட்ட தேர்தலுக்கும் சீனாவின் ஆதரவு “மியன்மார் மக்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.மக்களின் துன்பங்களை ஆழமாக்குகிறது மற்றும் நெருக்கடியை நீடிக்கிறது” என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த அறிக்கையின்படி, இனரீதியான ஆயுத அமைப்புககள் மியான்மரில் புரட்சியின் முன்னணியில் உள்ளனர். தமது பிராந்தியங்களில் அவர்கள் நடைமுறை அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள், மேலும் எதிர்கால கூட்டாட்சி ஜனநாயகத்தில் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர், அதே நேரத்தில் இராணுவ ஆட்சிக்குழு ஒரு “சட்டவிரோத மற்றும் குற்றவியல் அமைப்பாகும். அதுவே மியான்மரில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் என குறிப்பிடப்படுகிறது

இது சீனாவின் யுனான் மாகாணம் வெளியிட்டதாகக் கூறப்படும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சீனா-மியன்மார் எல்லையில் அமைந்துள்ள வடக்கு ஷானில் உள்ள மியன்மார் ஆட்சிக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்துமாறு தாங் தேசிய விடுதலை இராணுவத்தை (TNLA) எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஆபரேஷன் 1027 எனப்படும் தாக்குதலை நடத்தி வரும் சகோதரத்துவ கூட்டணி இனப் படைகளின் மூன்று உறுப்பினர்களில் தாங் தேசிய விடுதலை இராணுவமும் ஒன்றாகும்.

கடந்த ஜனவரியில் பீஜிங்கிற்கும் இனக் கூட்டணி ஆட்சிக்கும் இடையில் ஒரு போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆட்சியிலிருந்த இராணுவம் மீண்டும் தாங் தேசிய விடுதலை இராணுவ பிரதேசத்தில் குண்டுவீசி, போர்நிறுத்தத்தை மீறியது.

“நமது புரட்சிகர சக்திகள் சீனாவுக்கு எதிரான வெறுப்பை வளர்க்கவில்லை. நாங்கள் சீனாவையோ, எந்த இனத்தையோ வெறுக்கவில்லை, எதிரிகளை நாடவில்லை. எவ்வாறாயினும், சுதந்திரம், நீதி மற்றும் கௌரவத்திற்கான எமது மக்களின் பாதையில் எந்தவொரு தலையீடு அல்லது அழுத்தத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், ”என்று மியன்மார் சிவில் சமூகக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

மியான்மரில் தேர்தல் நடத்துவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக மியான்மரின் நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஜூலை மாதம், சீன கம்யூனிஸ்ட் கட்சி , பீஜிங்கிற்கு அழைத்தது.

இந்த நடவடிக்கைக்கு சீனா தனது ஆதரவை உறுதியளித்துள்ள நிலையில், 2025ல் தேர்தலை நடத்துவதாக குண்டர் குழுவின் தலைவர் மின் ஆங் ஹ்லைங் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில் இலக்கு பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராக விரிவான ஆயுதத் தடைகளை விதிக்கும் முயற்சிகளை ஆதரிக்கவும், நெருக்கடியைக் குறிப்பிடவும்
மியன்மாரின் 276 சிவில் சமூக அமைப்புகள் சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளன. மியன்மாரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது தற்காலிக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுமாறும் அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண ஐ.நா.வின் நடவடிக்கையை சீனா தடுக்கக் கூடாது எனவும் அவை கோரியுள்ளன..

மியன்மாரில் சீனாவின் மூலோபாய நலன்கள் அதன் கணிசமான பொருளாதார முதலீடுகள் மற்றும் நாட்டின் மூலோபாய இருப்பிடம் ஆகியவற்றால் இயக்கப்படுகின்றன

மியன்மாரின் இராணுவ ஆட்சிக் குழு ,கடந்த ஆறு நாட்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேரைக் கொன்றுகுவித்ததோடு பொதுமக்கள் இலக்குகள் மீது கொடிய வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. எதிர்ப்புப் படைகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை மீட்பதற்காக எதிர்த் தாக்குதல்களை நடத்துவதாக இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கின் அண்மைய அறிவிப்பை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்தன.

மியன்மாரின் இராணுவம் 2021 இல் ஒரு சதிப்புரட்சியை நடத்தியது.நாட்டின் பெரும்பாலான சிவிலியன் தலைமைகளை சிறையில் அடைத்தது. இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போரிட, ஜனநாயக சார்பு குழுக்கள் இனப் போராளிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. (ANI)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT