சீனாவின் இராணுவ விமானமொன்று தங்கள் நாட்டின் வான் பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்ததாக தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் விளைவாக தங்கள் பாதுகாப்பு தரப்பினர் உடனடியாகச் செயற்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் தாய்வான் வான் பரப்பை விட்டு விலகிச் சென்றதாகவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தெர்டர்பில் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், சீனாவின் இராணுவ விமானங்கள் எமது வான் பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிப்பதும் வான் பரப்பை ஊடறுத்து செல்வதும் எமது இறையாண்மைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். இவை எமது இறைமையை மீறும் செயற்பாடுகளும் கூட. இச் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெறுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.