Home » நான்கு பெண்கள் Deabodyயுடன் படாதபாடுபடும் பிரபுதேவா

நான்கு பெண்கள் Deabodyயுடன் படாதபாடுபடும் பிரபுதேவா

by damith
September 15, 2024 5:11 pm 0 comment

பிரபுதேவாவின் நடனம் என்பதை தாண்டி அவருடைய நடிப்புக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களுக்கு தீனி போடும் அளவுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படம் தான் ஜாலியோ ஜிம்கானா.

மகளிர் மட்டும் என்னும் படத்தில் நடிகர் நாகேஷ் ஒரு சீனுக்கு மட்டும் செத்த பிணமாக நடித்திருப்பார்.

பிணத்தை வைத்துக்கொண்டு ரேவதி, ஊர்வசி, ரோகினி செய்யும் அலப்பறை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். அதே கான்செப்டை ஒரு முழு படமாக பார்த்தால் எப்படி இருக்கும். அதைத்தான் ஜாலியோ ஜிம் கானா நம் கண் முன் காட்ட இருக்கிறது.

இதில் பிணமாக நடித்திருப்பவர் நடிகர் பிரபுதேவா. வில்லாக வளைந்து ஆடக்கூடிய ஆட்டக்காரர் ஒரு படம் முழுக்க எப்படி பிணமாக வருவார் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.என்னம்மா கண்ணு’, ‘சார்லி சாப்ளின்’, ‘காதல் கிறுக்கன்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘வியாபாரி’ போன்ற படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார்.ஒரு பாடி, 4 லேடி, படம் முழுக்க பிணமாய் பிரபு தேவா..இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே யோகி பாபு சர்ச் ஃபாதர் கெட்டப்பில் வந்து, என்னது கொலையா என ஆரம்பிக்கிறார்.

ஒரு டெட் பாடி நம்ம கூட இருக்கிறது நம்ம பாடில எந்த விதத்திலும் வெளியே தெரியக்கூடாது என வில்லத்தனமான வசனம் பேசி இருக்கிறார் நடிகை அபிராமி.

பிரபுதேவாவை கொலை செய்து விட்டதாக பயந்து நான்கு பெண்கள் டெட் பாடியை தங்களுடனே வைத்துக் கொண்டு கொலையை மறைக்க படாத பாடு படுகிறார்கள் பிரபுதேவா இறந்துவிட்டது தெரியாமல் அவரை கொலை செய்ய ஒரு கூட்டம் என இந்த ட்ரெய்லர் இருக்கிறது.

பின்னணியில் ஒரு பாடி 4 லேடி பாடல் அசத்தலாக இருக்கிறது. ட்ரெய்லரில் ஒரு சீனில் பிரபுதேவா அதிரடியாக சண்டை போடுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

ஒரு வேளை இறந்து விட்டது போல் இந்த பெண்களை பிரபுதேவா ஏமாற்றுவது தான் இந்த படத்தின் கதையாக கூட இருக்கலாம். ஜாலியோ ஜிம்கானா படத்தில்மடோனா, அபிராமி, யோகிபாபு, எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT