Thursday, October 10, 2024
Home » மலேசிய தொழிலதிபர் பிரமால் வாசுதேவன் தம்பதியர் இலங்கையில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கும் பேருதவி

மலேசிய தொழிலதிபர் பிரமால் வாசுதேவன் தம்பதியர் இலங்கையில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கும் பேருதவி

வறிய மக்களுக்கு நிவாரணம்; 40 ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திரசிகிச்சை

by mahesh
September 13, 2024 7:00 am 0 comment

மலேசியாவில் வசிக்கும் தொழிலதிபரான பிரமால் வாசுதேவன் மற்றும் அவரது துணைவியார் திருமதி சாந்தி பிரமால் ஆகியோர் ஏனையவர்களுக்கு பொருத்தமான விதத்தில் உதவுதல் தங்களது கடமை என நம்புகின்றனர். அவர்கள் இருவரும் தனிப்பட்ட பயணமாக இலங்கை வந்துள்ளனர். அவர்களின் மூதாதையர்கள் 1895 மற்றும் 1905 இற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையை விட்டு வெளியேறினர்.

இலங்கை மீது அவர்களுக்குள் உணர்வுபூர்வமான பற்றுதல் உள்ளது. பிரம்மாலும் சாந்தியும் தங்களின் உழைப்பில் ஒரு பகுதியை பல்வேறு தொண்டு முயற்சிகளுக்குச் செலுத்துகின்றனர்.

ஒருநாள் அவர்களுக்கு, ஒரு மின்னஞ்சல் வந்தது. இலங்கையில் ஒரு மீனவ கிராமத்திற்கு உதவுமாறு கோரிக்கை வந்தது. அங்கு வறுமையால் மக்கள் போராடுகிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. பிரம்மாலின் இதயம் கிராம மக்கள் மீது அனுதாபம் கொண்டது. அக்கோரிக்கையை ஆராய்ந்த பின்னர் அதற்கான திட்டத்திற்கு 50% செலவிட முடிவு செய்தார். இந்தத் திட்டம் வெற்றியடைந்தது. கிராமத்திற்கு மிகவும் தேவையான நிவாரணத்தைக் கொண்டு வந்தது. மக்கள் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர். இதனை சர்வேஸ் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்.

ஆனாலும் பிரம்மாலின் கருணை அத்தோடு நிற்கவில்லை. அவரது கவனம் இலங்கையில் குவிந்திருந்தது. ஜனவரி 2023 இல் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலையைக் கண்டு, அவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் 1 மில்லியன் அமெரிக்க ​ெடாலர்களை (SLR 300 மில்லியன்) அறுவை சிகிச்சைகளுக்கு நிதியளிப்பதற்காக உறுதியளித்தார். போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதில் ஆழ்ந்த அனுபவமுள்ள வேலாயுதம் சர்வேஸ் தலைமையிலான தொண்டு நிறுவனமான Assist RR ஊடாக கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு உதவ தீர்மானித்தார்.

பிரம்மாலின் தாராளமான பங்களிப்பால் நாடு முழுவதும் சுமார் 40,000 கண்புரை அறுவைச் சிகிச்சைகள் சாத்தியமாகின. இந்த முயற்சியின் இதயம் யாழ் போதனா வைத்தியசாலையாகும். இங்கு ​ெடாக்டர் மலரவன் மற்றும் அவரது அணியினரும் சில சமயங்களில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த அர்ப்பணிப்புள்ள கண்சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு ஒன்றுகூடி மகத்தான பணியை மேற்கொண்டது. 18 மாதங்களுக்கும் மேலாக, அவர்கள் சுமார் 16,000 அறுவைச் சிகிச்சைகளைச் செய்தனர்.

நோயாளிகளுக்கு போக்குவரத்து, உணவு மற்றும் பராமரிப்பு வழங்கப்பட்டன. அவர்களின் பார்வை மீட்டெடுக்கப்பட்டது. பிரம்மாளின் தளராத ஆதரவாலும், ​ெடாக்டர் மலரவன் மற்றும் அவரது குழுவினரின் அயராத முயற்சியாலும், சர்வேஸின் இடைவிடாத ஒருங்கிணைப்பாலும் இந்த அசாதாரண சாதனை கிடைத்தது.

இருளில் வாழ்ந்த மக்கள் இப்போது உலகின் அழகை மீண்டும் அனுபவிக்க முடியும், அவர்களின் நன்றியுணர்வு எல்லையற்றது. இதனையடுத்து பிரம்மால் இந்த சத்திர சிகிச்சையை தொடர கூடுதலாக அரை மில்லியன் அமெரிக்க ​ெடாலர்களை வழங்க உறுதியளித்தார். இன்று வடக்கில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கத் தேவையில்லை. சமீப வருடங்களில் பிரமால் மற்றும் அவரது துணைவியார் சாந்தியின் யாழ்ப்பாண பயணம் உணர்வுப்பூர்வமானது. அவர்களின் பெருந்தன்மை சமூகத்தில் ஒரு அழியாத முத்திரையை விட்டுச் செல்கிறது.

கடுமையான வறுமையை அனுபவிக்கும் சமூகங்களில் வயதானவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை மிகவும் முக்கியமானது. கண்புரை மங்கலான பார்வையை ஏற்படுத்துகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும். வயதான நபர்களுக்கு, சமைப்பது, ஆடை அணிவது அல்லது பாதுகாப்பாக சுற்றி வருவது போன்ற அன்றாட பணிகளைச் செய்வதற்கான அவர்களின் திறனைக் குறைக்கிறது.

குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் சிகிச்சை அளிக்கப்படாத கண்புரை பார்வை இழப்புக்கு முக்கிய காரணமாகும். முதியவர்கள் பார்வையை மீண்டும் பெறும்போது, ​​விவசாயம், தொழில் ஈடுபடல் அல்லது கால்நடைகளை பராமரித்தல் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x